முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Sun nxt இப்போது ஜியோ TV-யில்

Jio TV   ஜியோ பயனாளர்கள் கொண்டாடும் வகையில் ஜியோ TV Hotstar live, Play movies Content போன்றவற்றை வழங்கி வரும் நிலையில் தற்போது Sun nxt உடன் இணைந்து Sun nxt படங்கைளையும் வழங்குகிறது. இது ஜியோ பயனாளர்களை மேலும் மகிழ்ச்சியடைய செய்து இருக்கிறது. Sun nxt   sun nxt அதிகமான தென் இந்திய படங்களை கொண்ட ஒரு தளமாக உள்ளது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகியவை அடங்கும். Sun nxt -யை வோடபோன் ஐடியா வழங்கி வந்த நிலையில் தற்போது ஜியோவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. வோடபோன் ஐடியா Sun nxt மற்றும் Zee5 Content படங்களையும் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Nokia smart TV விரைவில் வர இருக்கிறது

நோக்கியா- பிளிப்கார்ட்     நோக்கியா மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் இணைந்து ஸ்மார்ட் TV தயாரிப்பை தொடங்க உள்ளன. இந்த TV-யை பிளிப்கார்ட் நிறுவனம் உள்நாட்டிலே உள்ள தொழில் நுட்பத்தை கொண்டு தயாரிக்க உள்ளது. எனவே இது மற்ற நிறுவன ஸ்மார்ட் TV - யை விட சற்று விலை மலிவாக கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நோக்கியா TV    இந்த நோக்கியா TV - யின் ஒலி (Audio) JBL Audio தொழில் நுட்பம் கொண்டு தயாரிக்கபடும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. நோக்கியா நிறுவனம் நெட்வொர்க், ஹெல்த் கேர் சாதனம் மற்றும் மொபைல்கள் போன்றவற்றை தயாரித்து வந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் TV -யையும் தயாரிக்க உள்ளது.