- டச் மற்றும் வாய்ஸ் டைபிங்
- விட்கெட், புதிய வடிவமைப்பு ஸ்டார்ட், டாஸ்க்பார் மற்றும் தேடல் அமைப்பு
- புதிய பார்வை மற்றும் அனுபவம்
புதிதாக அமைக்கப்பட்ட அம்சங்களுடன் தயாரகிவருகிறது விண்டோஸ் 11. இதில் முக்கிய அம்சமாக டச் மற்றும் வாய்ஸ் டிப்பிங் கருதப்படுகிறது. இது எளிமையாக ட்ச் கீபோர்ட் முலம் டேப்லெட் மோடில் எழுதுவதற்கு உதவுகிறது.மேலும் இதில் வாய்ஸ் டைப்பிங் முலம் எழுதும் வசதியும் உள்ளது.
புதிய விட்கெட் பல பயனுள்ள தகவல் மற்றும் அமைப்புகளை கொண்டுள்ளது. இது உங்கள் தினசரி வேலை மற்றும் தகவலை மிகவும் பயுடையதாக பல அம்சங்களை உள்ளடக்கியது எனவும் இதனை விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் வசதியும் கொண்டுள்ளது. மேலும் இது நடுவில் புதிய வடிவமைப்பு கொண்ட ஸ்டார்ட் மற்றும் டாஸ்க்பார் உள்ளது.
இது புதிய வடிவமைப்பு மற்றும் அனுபவம் தரும் வகையில் இருக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக இதில் கூர்மையான திரை மூலைக்கு பதிலாக வளைந்த வடிவமைப்பு கொண்ட திரை மூலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இதன் பீட்டா வேர்ஷனை Microsoft நிறுவனம் வெளியிட்டு மேலும் பல அம்சங்களை பரிசோதனை செய்து வருவது குறிபபிடத்தக்கது. விண்டோஸ் insider- ஐ பயன்படுத்தி விண்டோஸ் 11 பீட்டா வேர்ஷன் அனுபவத்தை பெறலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக