முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

புதிய அம்சங்களுடன் கூடிய விண்டோஸ் 11

டச் மற்றும் வாய்ஸ் டைபிங் விட்கெட், புதிய வடிவமைப்பு ஸ்டார்ட், டாஸ்க்பார் மற்றும் தேடல் அமைப்பு புதிய பார்வை மற்றும் அனுபவம் புதிதாக அமைக்கப்பட்ட அம்சங்களுடன் தயாரகிவருகிறது விண்டோஸ் 11. இதில் முக்கிய அம்சமாக டச் மற்றும் வாய்ஸ் டிப்பிங் கருதப்படுகிறது. இது எளிமையாக ட்ச் கீபோர்ட் முலம் டேப்லெட் மோடில் எழுதுவதற்கு உதவுகிறது.மேலும் இதில் வாய்ஸ் டைப்பிங் முலம் எழுதும் வசதியும் உள்ளது. புதிய விட்கெட் பல பயனுள்ள தகவல் மற்றும் அமைப்புகளை கொண்டுள்ளது. இது உங்கள் தினசரி வேலை மற்றும் தகவலை மிகவும் பயுடையதாக பல அம்சங்களை உள்ளடக்கியது எனவும் இதனை விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் வசதியும் கொண்டுள்ளது. மேலும் இது நடுவில் புதிய வடிவமைப்பு கொண்ட ஸ்டார்ட் மற்றும் டாஸ்க்பார் உள்ளது. இது புதிய வடிவமைப்பு மற்றும் அனுபவம் தரும் வகையில் இருக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக இதில் கூர்மையான திரை மூலைக்கு பதிலாக வளைந்த வடிவமைப்பு கொண்ட திரை மூலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இதன் பீட்டா வேர்ஷனை Microsoft நிறுவனம் வெளியிட்டு மேலும் பல அம்சங்களை பரிசோதனை செய்து வருவது குறிபபிடத்தக...

BSNL தினசரி data இருப்பை my பிஎஸ்என்எல் app- யில் எவ்வாறு காண்பது

My BSNL app- யில் தினசரி data இருப்பை காணும் வழிமுறை:   My BSNL app ஆனது மற்ற நெட்வொர்க் ஆப்புகளை போன்று இல்லாமல் சற்று மாறுபட்டு இருக்கும். மற்ற ஆப்களின் முகப்பு பக்கததில் அனைத்து விவரங்கள் சுருக்கமாகவும் எளிதாகவும் பறககும் வகையில் இருக்கும். இவற்றை பிஎஸ்என்எல் ஆப்பில் எவ்வாறு காணலாம் என்று விவரிக்கிறது இந்த கட்டுரை: முதலில் பிஎஸ்என்எல் ஆப்பை பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கி நிறுவ வேண்டும். உங்கள் விவரங்களை உள்ளீட்டு உள்நுழைக பிறகு முகப்பு பக்கம் மேல் உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும் இதன் கிழ்பகுதில் உள்ள prepaid enq பொத்தானை கிளிக் செய்யவும். இதன் மேல் பகுதில் உள்ள பிளஸ் ஐகான் யை கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணை சேர்க்கவும் பின் உங்கள் எண்ணை கிளிக் செய்யவும்.   பின் வரும் ஸ்க்ரீனில் உங்களுடைய எண்ணிற்கான பிளானை பார்க்கலாம்.  (உங்களுடைய plan என்பது உங்களது எண்ணிற்கான service validity ஆகும் மற்றும் STV என்பது Pack ஆகும். ஆனால் STV Pack Service validity யை வழங்காது) இதன் கீழ் உள்ள STV DETAILS யை கிளிக் செய்யவும்.  அடுத்த ஸ்க்ரீனில் STV voucher details 1ல் Pack...

இப்போது கால் ரெக்கார்டிங் வசதி நோக்கியா ஃபோனிலும்

Android 10 update       நோக்கியா அண்ட்ராய்டு ஒன் போன்ற ஃபோன்களில் பொதுவாக கால் ரெக்கார்டிங் மாதிரியான வசதிகள் இருக்காது மேலும் இம்மாதிரியான வசதி கூகிள் ஃபோன் செயலிகளிலும் இருக்காது. ஸ்டாக் அண்ட்ராய்டு OS அல்லாத ஃபோனகளில் (அதாவது Samsung, xiaomi MIUI, oppo color OS மற்றும் oneplus oxygen OS போன்ற பல ஃபோன்களில்) மட்டும் கிடைக்கிறது. இல்லையேனில் ஸ்டாக் OS ஃபோனில் இதற்க்கு தனியாக அப்க்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது நோக்கியா ஃபோன்களில் இதற்கான வசதி புதிய அண்ட்ராய்டு 10 அப்டெட்டில் ஏற்ப்படுத்தப்படுள்ளது. கால் ரெககார்டிங் இயக்கு முறை       இந்த வசதியை இயக்க உங்கள் ஃபோனை புதிய அண்ட்ராய்டு 10 அப்டெடிற்க்கு அப்க்ரேடு செய்து பிறகு ஃபோன் அப்பை அப்டெட் செய்ய வேண்டும். இப்போழுது உங்கள் ஃபோனில் இந்த வசதியை நீங்கள்  காணலாம். மேலும் இந்த வசதி நோக்கியா 6.1 பிளஸ், நோக்கியா 7.2, நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8.1 போன்ற மற்ற சில வகை நோக்கியா ஃபோனகளிலும் கிடைக்கிறது.

புதிய Snapdragon processor இந்தியாவின் NavIC தொழிற்நுட்பத்துடன் அறிமுகமாகிறது

NavIC என்றால் என்ன?          NavIC என்பது இந்தியாவின் புவியியல் இருப்பிடம் அமைப்பு இது ஒரு இந்தியாவின் தொழிற்நுட்பம் ஆகும். இது அமெரிக்காவின் GPS மற்றும் ரஷ்யாவின் GLONASS போன்ற இருப்பிடன் கண்டறியும் அமைப்பாகும். இதுவரை இந்தியாவில் GPS மட்டுமே இருப்பிடம் கண்டறிய அனைத்து சேவைகளுக்கும் பயன் படுத்தி வந்தது. இப்போழுது ISRO வின் கண்டுபிடிப்பான NavIC -யை பயன்படுத்த உள்ளது. Snapdragon processor NavIC உடன் வருகிறது     ISRO தனது NavIC தொழில்நுட்ப சேவை  பயன்பாட்டிற்க்கு கொண்டு வர Qualcomm-வுடன் இணைந்துள்ளது. மொபைல்களின் வன்பொருளில் உற்ப்பத்தி செய்யும் Qualcomm தற்போது அறிமுகப்படுத்தி உள்ள மூன்று ஃசிப்செட் களில் NavIC தொழில் நுட்ப சேவைக்கான ஆதர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக வரும் காலத்தில் அறிமுகமாகும் Snapdragon 720G, 662 மற்றும் 460 ஃசிப்செட்களுடன் கூடிய மொபைல்களில் இந்த சேவை பயன்பாட்டிற்க்கு வர இருக்கிறது. மேலும் இந்த ஃ சிப்செட்கள் WiFi 6 அமைப்பு மற்றும் தர சேவைகளுடன் அறிமுகமாகி உள்ளது.

Sun nxt இப்போது ஜியோ TV-யில்

Jio TV   ஜியோ பயனாளர்கள் கொண்டாடும் வகையில் ஜியோ TV Hotstar live, Play movies Content போன்றவற்றை வழங்கி வரும் நிலையில் தற்போது Sun nxt உடன் இணைந்து Sun nxt படங்கைளையும் வழங்குகிறது. இது ஜியோ பயனாளர்களை மேலும் மகிழ்ச்சியடைய செய்து இருக்கிறது. Sun nxt   sun nxt அதிகமான தென் இந்திய படங்களை கொண்ட ஒரு தளமாக உள்ளது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகியவை அடங்கும். Sun nxt -யை வோடபோன் ஐடியா வழங்கி வந்த நிலையில் தற்போது ஜியோவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. வோடபோன் ஐடியா Sun nxt மற்றும் Zee5 Content படங்களையும் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Nokia smart TV விரைவில் வர இருக்கிறது

நோக்கியா- பிளிப்கார்ட்     நோக்கியா மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் இணைந்து ஸ்மார்ட் TV தயாரிப்பை தொடங்க உள்ளன. இந்த TV-யை பிளிப்கார்ட் நிறுவனம் உள்நாட்டிலே உள்ள தொழில் நுட்பத்தை கொண்டு தயாரிக்க உள்ளது. எனவே இது மற்ற நிறுவன ஸ்மார்ட் TV - யை விட சற்று விலை மலிவாக கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நோக்கியா TV    இந்த நோக்கியா TV - யின் ஒலி (Audio) JBL Audio தொழில் நுட்பம் கொண்டு தயாரிக்கபடும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. நோக்கியா நிறுவனம் நெட்வொர்க், ஹெல்த் கேர் சாதனம் மற்றும் மொபைல்கள் போன்றவற்றை தயாரித்து வந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் TV -யையும் தயாரிக்க உள்ளது.

வந்துவிட்டது மின்சார பேருந்து

அரசு மின்சார பேருந்து     தமிழ்நாடு அரசு மின்சார பேருந்தின் சோதனை ஒட்டத்தை துவங்கிள்ளது. இந்த பேருந்தை அசோக் லேலண்ட் நிறுவணம் தயாரித்துள்ளது. மேலும் இது சோதனை ஓட்டமாக சென்னை சென்ட்ரலிருந்து திருவான்மியூர் வரை சுமார் மூன்று மாதங்களுக்கு இயக்கப்பட உள்ளது. சிறப்பு அம்சங்கள் லித்தியம் அயன் ஸ்வாப்பிங் பேட்டரி ஒரு முறை சார்ச் செய்தால் 40 கி.மீ. வரை செல்லும் திறன் குளிர்சாதன வசதி தனித்த ஏறும் மற்றும் இறங்கும் வழி 32 இருக்கைகள் மற்றும் தானியங்கி மின்சார கசிவு தடப்பு சோதனை ஓட்டம்      இதன் பேட்டரி சென்ட்ரலிருந்து ஒரு முறை திருவான்மியூர் சென்று திரும்பும் போது ஸ்வாப் செய்யப்டுகிறது. இதற்கு 5 லிருந்து 10 நிமிடம் வரை பிடிக்கும். மேலும் இதில் பயணிப்போர் அவர்கள் இறங்கும் நிறுத்தம் வரும் போழுது நிறுத்து பொத்தானை பயன்ப்படுத்தி ஓட்டுனர்க்கு அறிவிக்க இயலும். வழிதடம் அறிய ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.