Android 10 update நோக்கியா அண்ட்ராய்டு ஒன் போன்ற ஃபோன்களில் பொதுவாக கால் ரெக்கார்டிங் மாதிரியான வசதிகள் இருக்காது மேலும் இம்மாதிரியான வசதி கூகிள் ஃபோன் செயலிகளிலும் இருக்காது. ஸ்டாக் அண்ட்ராய்டு OS அல்லாத ஃபோனகளில் (அதாவது Samsung, xiaomi MIUI, oppo color OS மற்றும் oneplus oxygen OS போன்ற பல ஃபோன்களில்) மட்டும் கிடைக்கிறது. இல்லையேனில் ஸ்டாக் OS ஃபோனில் இதற்க்கு தனியாக அப்க்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது நோக்கியா ஃபோன்களில் இதற்கான வசதி புதிய அண்ட்ராய்டு 10 அப்டெட்டில் ஏற்ப்படுத்தப்படுள்ளது. கால் ரெககார்டிங் இயக்கு முறை இந்த வசதியை இயக்க உங்கள் ஃபோனை புதிய அண்ட்ராய்டு 10 அப்டெடிற்க்கு அப்க்ரேடு செய்து பிறகு ஃபோன் அப்பை அப்டெட் செய்ய வேண்டும். இப்போழுது உங்கள் ஃபோனில் இந்த வசதியை நீங்கள் காணலாம். மேலும் இந்த வசதி நோக்கியா 6.1 பிளஸ், நோக்கியா 7.2, நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8.1 போன்ற மற்ற சில வகை நோக்கியா ஃபோனகளிலும் கிடைக்கிறது.
Tech saavi Tamil is a blog about latest technology news and information